'புராஜெக்ட் ஏ' என்ற திட்டத்தின் கீழ், நம் கடற்படைக்கு உள்நாட்டிலேயே அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் உடைய போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, 'நீலகிரி, உதயகிரி, ஹிம்கிரி, தாராகிரி, துனாகிரி' ஆகிய ஐந்து போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த போர்க்கப்பல்களுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் மலைத் தொடர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இதன்படி, கர்நாடகாவில் உள்ள விந்தியகிரி மலைத் தொடரை பெருமைப்படுத்தும் வகையில், ஆறாவது கப்பலுக்கு விந்தியகிரி என பெயரிடப்பட்டு, அந்த கப்பலை வடிவமைக்கும் பணி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஹூக்ளியில் உள்ள, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்' நிறுவனத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், கோல்கட்டாவில் நடந்த விழாவில் இந்த கப்பலை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
0 Comments