மூரிங் பிளேஸ் தளத்துக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார் / Union Home and Cooperatives Minister Amit Shah also laid the foundation stone for the Mooring Place site
குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தின் ஒரு பகுதி ரான் ஆப் கட்ச். பல நூறு கிலோ மீட்டர் விரிந்து பரந்து கடக்கும் சதுப்பு நிலப் பகுதி. இதன் ஒரு முனைதான் இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளாக பிரிகிறது.
பாகிஸ்தானுடனான மிக முக்கியமான எல்லை பிரச்சனை உள்ள சர் கிரீக் என்பது இங்குதான் இருக்கிறது. இந்த சர் கிரீக், ஹராமி நாலா பகுதிக்குதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி விசிட் அடித்துள்ளார்.
ஹராமி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படையின் கப்பல்கள் மற்றும் படகுகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய மூரிங் பிளேஸ் (Mooring Place) எனப்படும் தளத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார் அமித்ஷா.
மேலும் குஜராத்தின் கட்ச்சில் பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹராமி நாலாவுக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
0 Comments