இந்திய மல்யுத்த சங்கத் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சிங் இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய இவருக்கு எதிராக மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போர்க்கொடி துாக்கினர்.
மத்திய அரசு தலையிட, போராட்டத்தை கைவிட்டனர்.மல்யுத்த சங்கத்தை கடந்த ஏப். 27 முதல் தற்காலிக குழு நிர்வகிக்கிறது. 45 நாளில் நிர்வாகிகள் தேர்தலை நடத்தும்படி ஒருங்கிணைந்த மல்யுத்த கூட்டமைப்பு (யு.டபிள்யு.டபிள்யு.,), டபிள்யு.எப்.ஐ.,க்கு எச்சரிக்கை விடுத்தது.இதனால் தேர்தலை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்தது.
இத்தேர்தலில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு மாநில சங்கங்கள் கோர்ட்டில் முறையிட்டதால் தேர்தல் தடைபட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தாததால், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, யு.டபிள்யு.டபிள்யு., தடை விதித்தது.
இது உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை, இந்த தடை தொடரும்.
புதிய சிக்கல்தடை காரணமாக இந்திய நட்சத்திரங்கள் சர்வதேச போட்டிகளில் தேசியக் கொடியுடன் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், சர்வதேச மல்யுத்த சங்க கொடியுடன் தான் போட்டிகளில் விளையாட வேண்டும்.
0 Comments