தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.26) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் சுற்றுலாவுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலா தலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023”-ஐ வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments