டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் அமல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves signing of Memorandum of Understanding between India-US in the field of sharing successful digital solutions implemented on population scale for digital transformation
இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆர்மீனியக் குடியரசின் உயர் தொழில்நுட்பத் தொழில் அமைச்சகம் இடையே டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2023 ஜூன் 12 ஆம் தேதி கையெழுத்திட்டதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் (இந்தியா ஸ்டாக்) ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் துறையில் அரசுடன் அரசு (ஜி 2 ஜி) வணிகத்துடன் வணிகம் (பி 2 பி) என இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவற்றின் வழக்கமான நிர்வாகக் செயல்பாட்டு ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்படும்.
0 Comments