பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது.
இதில் இந்திய வீராங்கனை நிஸ்செல் பங்கேற்றார். அபாரமாக தனது திறமையை வெள்ளிப்படுத்திய அவர் 458 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார். நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
0 Comments