Recent Post

6/recent/ticker-posts

லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ஐ.எஸ்.டி.எஸ்)- பசுமை எரிசக்தி வழித்தடம் (ஜி.இ.சி) கட்டம் -2க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது / Cabinet approves Inter-State Transmission System (ISTS)- Green Energy Corridor (GEC) Phase-2 for 13 GW renewable energy project in Ladakh

லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு, மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ஐ.எஸ்.டி.எஸ்)- பசுமை எரிசக்தி வழித்தடம் (ஜி.இ.சி) கட்டம் -2க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.

2029-30ஆம் நிதியாண்டிற்குள் இத்திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவி 40 சதவீதம் அதாவது ரூ.8,309.48 கோடி என்பதுடன், மொத்தம் ரூ.20,773.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லடாக் பிராந்தியத்தின் சிக்கலான நிலப்பரப்பு, பாதகமான பருவநிலை, பாதுகாப்பு நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய மின்தொகுப்புக் கழகம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையாக இருக்கும்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு- பசுமை எரிசக்தி வழித்தடம் கட்டம் -2 உடன், கூடுதலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.12,031.33 கோடி மதிப்பீட்டில் 10,753 கி.மீ தூரத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகள் மற்றும் 27546 எம்.வி.ஏ திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel