Recent Post

6/recent/ticker-posts

கனிம உற்பத்தி 2023 ஆகஸ்டில் 12.3% அதிகரிப்பு / Mineral production to increase by 12.3% in August 2023

கனிம உற்பத்தி 2023 ஆகஸ்டில் 12.3% அதிகரிப்பு / Mineral production to increase by 12.3% in August 2023

இந்திய சுரங்க பணியகத்தின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12 = 100) 111.9 ஆக உள்ளது, இது 2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 12.3% அதிகமாகும்.

அதே நேரத்தில், 2023-24-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 8.3 சதவீதமாகும்.

2023 ஆகஸ்ட் மாதத்தில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி நிலை - நிலக்கரி 684 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 28 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 3110 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், பாக்சைட் 1428 ஆயிரம் டன், குரோமைட் 148 ஆயிரம் டன், தாமிரம் 10 ஆயிரம் டன், தங்கம் 113 கிலோ கிராம், இரும்புத்தாது 181 லட்சம் டன், ஈயம் 30 ஆயிரம் டன், மாங்கனீசு 233 ஆயிரம் டன், துத்தநாகம் 132 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 365 லட்சம் டன், பாஸ்போரைட் 107 ஆயிரம் டன், மாக்னசைட் 10 ஆயிரம் டன்.

2022- ஆகஸ்ட் மாதத்தைவிட, 2023 ஆகஸ்ட் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கிய கனிமங்கள் - தங்கம் (46.8%), பாஸ்போரைட் (40.7%), மாங்கனீசு தாது (36.9%), தாமிரக் கனிமங்கள் (18.9%), நிலக்கரி (17.8%), இரும்புத் தாது (14.9%), சுண்ணாம்புக்கல் (13.8%), இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) (9.9%), மாக்னசைட் (4.5%), பெட்ரோலியம் (கச்சா) (2.1%), குரோமைட் (1.4%).

முக்கிய கனிமங்களின் எதிர்மறை வளர்ச்சி - பாக்சைட் (-1.5%), துத்தநாகம் (-4.1%), லிக்னைட் (-5.4%), ஈயம் (-15.1%).

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel