Recent Post

6/recent/ticker-posts

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2023 / ASIAN PARA GAMES 2023

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2023 / ASIAN PARA GAMES 2023

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என 521 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம் என 131 பதக்கங்களுடன் ஈரான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம் என 150 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

30 தங்கம், 33 வெள்ளி, 40 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் கொரியா நான்கம் இடம் பிடித்துள்ளது. 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறைந்த சர்வதேச போட்டிகளில் 111 பதக்கங்களை இந்தியா வென்றது இதுவே முதல்முறை.

கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில்கூட இந்தியா 101 பதக்கங்கள் மட்டுமே வென்றது. 2010-ம் ஆண்டு சீனாவின் கான்சோ நகரில் நடைபெற்ற முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களை மட்டுமே பெற்று 15வது இடம் பிடித்தது.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றதே அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel