Recent Post

6/recent/ticker-posts

2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PEACE PRIZE 2023

2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு / NOBEL PEACE PRIZE 2023

TAMIL

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்க நார்வே நோபல் அமைப்பு முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நர்கிஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டம் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய துயரங்களுடன்தான் நிகழ்ந்திருக்கிறது.

TO KNOW MORE ABOUT - BLOXFLIP PROMO CODE

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறை தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். 

ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையல் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை (அக்.9) அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

It has been announced that the Norwegian Nobel Organization has decided to award the 2023 Nobel Peace Prize to Nargis Mohammadi for her struggle against the oppression of women in Iran and her struggle to promote human rights and freedom for all.

Nargis Mohammadi, who has been nominated for the 2023 Nobel Peace Prize, has faced great tragedy in her own life.

Iranian authorities have arrested him 13 times. He has been convicted five times. Thus, he received a total of 31 years of imprisonment and 154 lashes. Tragically, Nargis Mohammadi is still in jail.

A physics student, Mohammadi identified herself as a fighter for equality and women's rights. She was first arrested in 2011 for her efforts to help imprisoned social activists fighting for Iranian women and their families. He was also sentenced to several years in prison under this charge.

Nobel Prizes for Medicine, Physics, Chemistry and Literature have been announced so far, while the Nobel Peace Prize was announced on Friday. It is noteworthy that the next Nobel Prize for Economics will be announced on Monday (Oct. 9).

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel