Recent Post

6/recent/ticker-posts

சம்ப்ரிதி 2023 கூட்டு ராணுவப் பயிற்சி / SAMPRITI 2023 JOINT MILITARY EXERCISE

SAMPRITI 2023 JOINT MILITARY EXERCISE

TAMIL

மேகாலயா மாநிலம் உம்ரோயில் இந்தியா- பங்களாதேஷ் இடையே 11-ம் ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியான சம்ப்ரிதி 2023 அக்டோபர் 03-ம் தேதி தொடங்கியது.

சுழற்சி அடிப்படையில் இரண்டு நாடுகளும் ஏற்பாடு செய்யும் இந்தப் பயிற்சி, அடிப்படையில் வலுவான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை குறிக்கிறது.

2009 ஆம் ஆண்டில் அசாமின் ஜோர்ஹாட்டில் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி 2022 –ம் ஆண்டு வரை பத்து வெற்றிகரமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

14 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள சம்ப்ரிதி- XI, இரு தரப்பிலிருந்தும் சுமார் 350 வீரர்களை ஈடுபடுத்தும். இந்தப் பயிற்சி இரு ராணுவங்களுக்கும் இடையிலான பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், பயிற்சி உத்திகளை பகிர்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.

52 பங்களாதேஷ் தரைப்படை பிரிகேட் பிரிவின் கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் முகமது மஃபிசுல் இஸ்லாம் ரஷீத் தலைமையில் 170 வீரர்கள் பங்களாதேஷ் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

இந்தியப் படைப் பிரிவில் முக்கியமாக ராஜ்புத் ரெஜிமெண்ட் பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் உள்ளனர். மலைப் படைப்பிரிவு கமாண்டர் பிரிகேடியர் எஸ்.கே.ஆனந்த் இந்தியப் படையை வழிநடத்துகிறார்.

இந்தப் பயிற்சியில் பீரங்கிகள், பொறியாளர்கள் மற்றும் இரு தரப்பிலிருந்தும் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

ENGLISH

The 11th annual India-Bangladesh joint military exercise Samprithi 2023 began on October 03 at Umroi in Meghalaya. Organized by the two countries on a rotational basis, the exercise essentially signifies stronger bilateral defense cooperation efforts.

The exercise, which started in 2009 in Jorhat, Assam, has had ten successful exercises till 2022. Sampridhi-XI, scheduled for 14 days, will involve around 350 players from both sides. The exercise highlights the importance of enhancing interoperability between the two militaries, sharing training strategies and promoting best practices.

170 soldiers have been included in the Bangladesh team under the command of Brigadier General Mohammad Mafisul Islam Rashid, Commander of 52 Bangladesh Army Brigade. The Indian Army unit mainly consists of soldiers from the Rajput Regiment Battalion. Mountain Brigade Commander Brigadier SK Anand leads the Indian force.

Soldiers from various branches like artillery, engineers and services from both sides are participating in the exercise.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel