Recent Post

6/recent/ticker-posts

செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் மத்திய அரசுடன் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Technology giant IBM signs MoU with central government in areas of semiconductors, artificial intelligence (AI) and quantum computing

செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் மத்திய அரசுடன் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Technology giant IBM signs MoU with central government in areas of semiconductors, artificial intelligence (AI) and quantum computing

TAMIL

செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்ப்பதுடன், உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செய்ற்கை நுண்ணறிவிலும் இந்தியா தனது பார்வையை செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் ஒருபகுதியாக, செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் மத்திய அரசுடன் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையிலும், நாட்டில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ENGLISH

In addition to attracting investment in semiconductor technology, efforts are also being made to build a domestic semiconductor manufacturing infrastructure. Similarly, India has set its sights on artificial intelligence, an emerging technology.

In this context, technology giant IBM has entered into an MoU with the central government in the areas of semiconductors, artificial intelligence (AI) and quantum computing as part of a significant development in India's semiconductor sector.

The agreement was signed in the presence of Rajiv Chandrasekhar, Union Minister of State for Electronics and Information Technology, who has been keenly focusing on India's digitization drive and steps to promote electronics and semiconductor manufacturing in the country.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel