முதலாவது ராணுவ பாரம்பரிய விழாவை பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் / The first military heritage ceremony was inaugurated by the Defense Minister

இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் முதல் பதிப்பை புதுதில்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உரையாடல்கள், கலை, நடனம், நாடகம், கதை சொல்லல் மற்றும் கண்காட்சிகள் மூலம் பல நூற்றாண்டுகளாக பரிணமித்த இந்தியாவின் வளமான ராணுவ கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதை இந்த இரண்டு நாள் திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் முதன்மையாக புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குழு விவாதங்கள் மூலம் வெவ்வேறு புரிதல்களையும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கும்.

இந்த நிகழ்வின் போது, நாட்டின் பண்டைய உத்தியிலான புத்திசாலித்தனத்தை சமகால ராணுவ களத்துடன் ஆராய்ந்து ஒருங்கிணைப்பதன் மூலம் உள்நாட்டு உரையாடலை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் மற்றும் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பான 'புராஜெக்ட் உத்பவ்' திட்டத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.