தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் மாவட்ட நீதிபதி பதவிக்கான முதற்கட்டத் தேர்வு 30.09.2023 சனிக்கிழமை இரண்டு அமர்வுகளில், அதாவது தாள் – I (காலை 09.00 – நண்பகல் 12.00) மற்றும் தாள் – II (பிற்பகல் 02.00 – மாலை 05.00 மணி) வரை நடைபெற்றது.
தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், விண்ணப்பதாரர்கள் பதிவாளர் (ஆட்சேர்ப்பு), உயர்நீதிமன்றம், சென்னை, மின்னஞ்சல் (judicialrecruitmentcell.mhc@gmail.com) மூலம் இன்று முதல் இரண்டு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பெறப்பட்ட ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது தேவையான விவரங்கள் இல்லாமல் அல்லது தவறான கேள்வி எண் அல்லது தெளிவற்ற ஆட்சேபனைகள் எதுவும் இருந்ததால் அவை கவனம் செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments