Recent Post

6/recent/ticker-posts

இந்தியக் கடற்படைக் கப்பல் பியாஸின் இடைக்கால மேம்பாடு மற்றும் மறுசக்தி ஆக்கத்திற்காக கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defense MoU with Cochin Shipyard for Interim Upgrade and Repowering of Indian Naval Vessel Beas

இந்தியக் கடற்படைக் கப்பல் பியாஸின் இடைக்கால மேம்பாடு மற்றும் மறுசக்தி ஆக்கத்திற்காக கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.313.42 கோடி செலவுபிடிக்கும் ஒப்பந்தத்தில் 2023, அக்டோபர் 16 அன்று கையெழுத்திட்டது.

ஐ.என்.எஸ் பியாஸ், பிரம்மபுத்திரா வகை போர்க்கப்பலில் நீராவியிலிருந்து டீசல் உந்துவிசையால் இயக்கப்படும் முதல் போர்க்கப்பல் ஆகும். 2026ஆம் ஆண்டில் இடைக்கால மேம்படுத்தல் மற்றும் மறு-சக்தி பணிகள் நிறைவடைந்ததும் ஐ.என்.எஸ் பியாஸ் நவீன ஆயுதத் தொகுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்த் திறனுடன் இந்தியக் கடற்படையில் இணையும்.

இந்தியக் கடற்படையின் பராமரிப்பு முறையில் மாற்றக்கூடிய முதலாவது மறுசக்தி ஆக்கத் திட்டம் சிறப்பான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்தத் திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்; 3500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.

இந்தத் திட்டம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியில் தற்சார்பு இந்தியாவின் பெருமைமிகு அம்சமாக இருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel