Recent Post

6/recent/ticker-posts

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves MoU between India, France for cooperation in digital technology sector

 

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves MoU between India, France for cooperation in digital technology sector

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பிரெஞ்சுக் குடியரசின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் இடையே கையெழுத்தான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்பான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான அணுகலை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு பங்கேற்பாளரின் இலக்கையும் பரஸ்பரம் ஆதரிக்கும்.
  • டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகள் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும்.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படியான கீழ் ஒத்துழைப்பு, பங்கேற்பாளர்கள் இருவராலும் கையொப்பமிடப்பட்ட தேதியில் தொடங்கி ஐந்து (5) ஆண்டுகள் நீடிக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel