Recent Post

6/recent/ticker-posts

மகளிருக்கு உரிமைத் தொகை - 2ம் கட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தார் / The Chief Minister launched the Women's Entitlement - Phase 2

மகளிருக்கு உரிமைத் தொகை - 2ம் கட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தார் / The Chief Minister launched the Women's Entitlement - Phase 2

தமிழகத்தில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2 மாதங்கள் அளிக்கப்பட்ட நிலையில், 3-ஆவது மாதமாக நவம்பா் மாதமும் வழங்கப்படவுள்ளது. 

தீபாவளி பண்டிகை காரணமாக, நவ.10-ஆம் தேதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவரவா் வங்கிக் கணக்குகளில் சோ்க்கப்பட்டு வருகின்றன.

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, சென்னை கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டத்தை 7.35 லட்சம் பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதன் மூலம் மகளிா் உரிமைத் தொகை பெறுவோா் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயா்ந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel