Recent Post

6/recent/ticker-posts

42வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Day Celebration at 42nd India International Trade Fair: Minister Saminathan inaugurated

42வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா - அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார் / Tamil Nadu Day Celebration at 42nd India International Trade Fair: Minister Saminathan inaugurated
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னோடி திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துபாய், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணைர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதில் முக்கிய அம்சம் சென்னையில் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான விவரங்களை பார்வையாளர்கள் அறிந்து பயன்பெறும் வகையில் 'க்யூ ஆர் கோட்' முறை பொருத்தப்பட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த முக்கிய திட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் 42வது இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் திறந்தவெளி கலையரங்கில் 'தமிழ்நாடு நாள் விழா'வை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பரதநாட்டியம் மற்றும் கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கோலாட்டம் ஆகிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர் கண்டுகளித்தனர். 

டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel