இந்திய கடலோரக் காவல்படையால் 25 நவம்பர் 2023 அன்று குஜராத்தின் வாடினாரில் 9வதுதேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் டிஜி ராகேஷ் பால் மற்றும் தலைவர் என்ஓஎஸ்டிசிபி ஆகியோர் பயிற்சியின் போது அனைத்து முகமைகளின் தயார்நிலையை ஆய்வு செய்தனர்.
மத்திய மற்றும் கடலோர மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் முகமைகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
31-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள், 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவைச் சமாளிக்க பல்வேறு வள முகமைகளுக்கு இடையிலான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும் அதன் நோக்கத்தை இந்தப் பயிற்சி நிறைவேற்றியது
0 Comments