Recent Post

6/recent/ticker-posts

BOOKER PRIZE 2023 | புக்கர் பரிசு 2023

BOOKER PRIZE 2023 | புக்கர் பரிசு 2023

TAMIL

BOOKER PRIZE 2023 | புக்கர் பரிசு 2023: கடந்த ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட கதையான ‘The Seven Moons of Maali Almeida’ புத்தகத்தை எழுதியதற்காக புக்கர் பரிசை ஷெஹான் கருணாதிலகா வென்றார். 

'Prophet Song' நாவலின் கதைக்களம் அடக்குமுறை ஆட்சியின் கீழ் எதிர்காலத்தில் அயர்லாந்தில் நடக்கும் கதையாக இருக்கிறது. குடும்பங்களில் உள்நாட்டுப் போரின் தாக்கத்தை இந்நாவல் ஆராய்கிறது.

அரசியல் மோதலைப் பற்றிய நாவல்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் ஐரிஷ் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் புக்கர் விருதை வென்றார், 

புக்கர் பரிசை வென்ற ஐந்தாவது ஐரிஷ் எழுத்தாளர் லிஞ்ச் ஆவார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்பட்ட சிறந்த புனைகதை நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

குழு நடுவர்களில் ஒருவரான கனடா நாவலாசிரியர் Esi Edugyan, "நமது தற்போதைய சூழலில் சமூக மற்றும் அரசியல் கவலைகளை படம்பிடித்துக் காட்டிய " உண்மையான" கதை என்று விவரித்தார். 

£50,000 மதிப்புள்ள புக்கர் பரிசை வழங்குவதற்கான முடிவு "சுமார் ஆறு மணி நேரம்" நீடித்த விவாதங்கள் மற்றும் பல சுற்று வாக்குப்பதிவுகள் மூலம் முடிவு செய்யப்பட்டது என்று Esi Edugyan தெரிவித்தார்.

ஆங்கில நாவலாசிரியர் மெலிசா ஹாரிசன், இந்த நாவல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். மற்றொரு நாவலாசிரியர், Aimée Walsh ஒரு மதிப்பாய்வில், "லிஞ்சின் இந்த நாவல், அயர்லாந்து போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. 

அங்கு அகதிகள் நிலத்தில் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க கடலுக்குச் செல்கிறார்கள். இந்த நாவல், பாலஸ்தீனம், உக்ரைன் மற்றும் சிரியாவில் நடந்த வன்முறை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தப்பியோடிய அனைவரின் அனுபவத்தையும் எதிரொலிக்கிறது" என்று குறிப்பிட்டார்.

நாவல் பற்றி

BOOKER PRIZE 2023 | புக்கர் பரிசு 2023: புத்தகத்தின் கதைக்களம் கற்பனையான எதிர்கால அயர்லாந்தில் அடக்குமுறை ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது. உள்நாட்டுப் போர் குடும்பங்கள் அயர்லாந்தை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்று கதை கூறுகிறது.

கதையானது டுப்ளினை மையமாகக் கொண்டது, அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட இரகசிய காவல்துறையினர், ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். 

கதாநாயகி எலிஷ் ஒரு நுண்ணுயிரியலாளர் ஆவார், அவர் தனது கணவர் காணாமல் போனதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தனது நான்கு குழந்தைகளையும் அவரது வயதான தந்தையையும் கவனித்துக் கொள்கிறார். இவ்வாறு அந்தக் கதை விரிகிறது.

ENGLISH

BOOKER PRIZE 2023: Last year, Shehan Karunathilaka won the Booker Prize for his book 'The Seven Moons of Maali Almeida', a story centered on the Sri Lankan civil war. The novel 'Prophet Song' is set in a future Ireland under a repressive regime. The novel examines the impact of civil war on families.

Novels about political conflict have won the Booker Prize for the second time in a row. In 2018, Irish author Anna Burns won the Booker Prize, making Lynch the fifth Irish author to win the Booker Prize. The Booker Prize is awarded to the best fiction novel written in English and published in England and Ireland.

Canadian novelist Esi Edugyan, one of the panel judges, described it as a "true" story that "captures the social and political concerns of our current climate". The decision to award the £50,000 Booker prize was made after "about six hours" of deliberations and several rounds of voting. He said.

English novelist Melissa Harrison noted that the novel is significant. Another novelist, Aimée Walsh, wrote in a review, "Lynch's novel reflects the reality of war-torn Ireland, where refugees take to sea to escape persecution on land. The novel echoes the experience of all those fleeing violence and war-torn countries in Palestine, Ukraine and Syria." Mentioned.

About the novel

BOOKER PRIZE 2023: The plot of the book describes what it would be like in a fictional future Ireland under a repressive regime. The story goes that civil war leads to families fleeing Ireland.

The story is set in Dublin, where the newly formed secret police are heading towards a dictatorship established by a government. Protagonist Eilish is a microbiologist who takes care of her four children and her elderly father in the midst of a civil war following the disappearance of her husband. Thus the story unfolds.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel