தமிழகம் முழுவதும் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள்மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் விவசாய தொழிலாளர்கள் தங்களுடைய ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தமிழக அரசு வழங்கும் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வட்டி இல்லா கடன் 2023-2024ம் நிதி ஆண்டில் 1500 கோடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இந்த கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments