மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் 2வது தவணையில் உள்ள நிதி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது.
ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். முதல் தவணையை இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது.
0 Comments