உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி நியமனம் செய்கிறார்.இவ்வமைப்பில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கடந்த சில தினங்களுக்கு முன் பணி நிறைவு பெற்றார்.
இதையடுத்து காலியாக உள்ள பதவிக்கு நீதிபதி அனிருத்தா போஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு கொலீஜியம் அமைப்பில் நியமிக்கப்பட்டார். இவர் 2024 ஏப்ரல் 10-ம் தேதிவரை பதவியில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் சஞ்சீப் கண்ணா, பி.ஆர்.காவி, சூரியகாந்த், அனிருத்தா போஸ் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
0 Comments