DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2024 PDF: குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முன்னதாக 16 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தேர்வு முடிவுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில், குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. இதன் மொத்த காலி பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
65 பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் குரூப் 1 பணி இடங்களுக்காக தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதேபோல குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.
0 Comments