ஐஐஎம் லக்னோ மற்றும் புதுடெல்லியில் உள்ள தொழில்துறை கூட்டு நிறுவனமான ஜேகே அமைப்பு சார்பில் 2022-23 ஐஐஎம் லக்னோ தேசிய தலைமை விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தலைவர்' என்ற பிரிவில் லஷ்மிபத் சிங்கானியா விருதுக்கு டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் வி.மோகன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, லஷ்மிபத் சிங்கானியா விருதை வழங்கி கவுரவித்தார். இந்த பிரிவில் விருது பெறும் இரண்டாவது இந்திய மருத்துவர் என்ற பெருமையையும் டாக்டர் மோகன் பெற்றுள்ளார்.
0 Comments