ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவை மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, சுஷ்ரி ஷோபா கரந்தலாஜே, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அஹுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விழிப்புணர்வை அதிகரிப்பதையும், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை நிறுவுவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்ட இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, தானியங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்கான அரசின் கொள்கைகள் மற்றும் சந்தை கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார்.
0 Comments