Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 நகரங்கள் - 2023 / Top 10 Safest Cities for Women in India - 2023

இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 நகரங்கள் - 2023
Top 10 Safest Cities for Women in India - 2023

இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 நகரங்கள் - 2023 / Top 10 Safest Cities for Women in India - 2023

TAMIL

இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 நகரங்கள் - 2023 / Top 10 Cities for Women in India - 2023: தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான முதல் 10 நகரங்கள் - 2023 பொதுக் கருத்து மற்றும் மக்கள் அளித்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஒரு பிரிவாகவும் கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 113 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் 49 நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 100க்கு 48.42 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கோவை 9வது இடத்தையும், மதுரை 11வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், 64 நகரங்களில் கள ஆய்வில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. 

100க்கு 40.39 மதிப்பெண்கள் பெற்று வேலூர் 2வது இடம், சேலம் 6வது இடம், ஈரோடு 7வது இடம், திருப்பூர் 8வது இடம், புதுச்சேரி 10வது இடம், திருநெல்வேலி 29வது இடம், தஞ்சாவூர் 30வது இடம், தூத்துக்குடி 331வது இடத்தில் உள்ளது.

இந்த ஆய்வு பெண்களுக்கான சமூக உள்ளடக்கம் மற்றும் தொழில்துறை உள்ளடக்கம் அடிப்படையிலானது. சமூக உள்ளடக்கத்தில், நகர்ப்புற வாழ்வாதாரம், பாதுகாப்பு, பெண்களுக்கான பிரதிநிதித்துவம், பெண்களுக்கு அதிகாரம், பெண்களுக்கான வாகன சேவை, காவல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், எழுத்தறிவு, பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில் சென்னை 53.1 மதிப்பெண்களும், திருச்சி 52.8 மதிப்பெண்களும் பெற்றுள்ளன. சென்னைக்கு 52.8 மதிப்பெண்களும், திருச்சிக்கு 13.4 மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர பொதுப் போக்குவரத்து, வாழ்க்கைச் செலவு, விளக்குகள் நிறைந்த சாலைகள், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, அரசின் முன்முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு, இரவுப் பயணத்தில் சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் குறித்த பொதுக் கருத்து, குழந்தைகளுக்கான கல்வி வசதி, மருத்துவ வசதிகள், பெண்களுக்கான கல்வி வசதிகள், வேலைவாய்ப்பு, குழந்தை பாதுகாப்பு, தங்குமிடங்கள், பொழுதுபோக்கு வசதிகள், பாதுகாப்பு, வீடு, வாழ்க்கைத் தரம், நடமாட்டம் மற்றும் போக்குவரத்து வசதிகள், குடும்பங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், தற்காலிக தங்கும் வசதிகள், தொழில்முறை திறன்களுக்கான அணுகல்,பசுமையான இடங்கள், அரசு நிறுவனங்களின் செயல்திறன், பெண் போலீஸ் அதிகாரிகள், சட்ட அமலாக்கம், குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகள், பணியிடத்தில் பாலின சமத்துவம் மற்றும் சமூக மாற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. நாடு தழுவிய கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் திருச்சியும் சென்னையும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

Top 10 Cities for Women in India - 2023: The Top 10 Cities for Women in India - 2023 has been ranked by private company Avatar Group based on public opinion and scores given by people. For this, cities with a population of more than 10 lakhs as one division and cities with a population of less than 10 lakhs as one division were conducted from last July to December.

In a survey of 113 cities across the country, Chennai topped 49 cities in the category of cities with a population of more than 10 lakh. Scored 48.42 out of 100. Coimbatore is ranked 9th and Madurai is ranked 11th. 

Similarly, among cities with a population of less than 10 lakh, Trichy topped the field survey out of 64 cities. With a score of 40.39 out of 100, Vellore is 2nd, Salem 6th, Erode 7th, Tirupur 8th, Puducherry 10th, Tirunelveli 29th, Thanjavur 30th, Tuticorin 331st.

This study is based on social inclusion and industrial inclusion for women. In social inclusion, the score is given on the basis of urban livelihood, security, representation of women, empowerment of women, vehicle service for women, representation of women in police force, literacy, development programs for women. Out of this, Chennai got 53.1 marks and Trichy got 52.8 marks. Chennai has been given 52.8 marks and Trichy 13.4 marks.

Apart from this public transport, cost of living, lighted roads, CCTV camera surveillance, awareness of government initiatives, social restrictions on night travel, public opinion on women, education facility for children, medical facilities, education facilities for women, employment, child protection, shelters, entertainment Facilities, security, housing, quality of life, mobility and transport facilities, support available to families, hostels, hotels, temporary accommodation, access to professional skills, green spaces, efficiency of government agencies, women police officers, law enforcement, child care and elder care Scores are given based on factors such as facilities, gender equality in the workplace and social change. Trichy and Chennai have topped the list of best cities for women in India based on feedback collected in a nationwide field survey.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel