Recent Post

6/recent/ticker-posts

2023 நவம்பரில் ஒட்டுமொத்த கனிம உற்பத்தி 6.8% அதிகரிப்பு / Overall mineral production to increase by 6.8% in November 2023

2023 நவம்பரில் ஒட்டுமொத்த கனிம உற்பத்தி 6.8% அதிகரிப்பு / Overall mineral production to increase by 6.8% in November 2023

2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சுரங்க, குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12 = 100) 131.1 ஆக உள்ளது, இது 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.8% அதிகமாகும்.

இந்திய சுரங்க பணியகத்தின் (ஐபிஎம்) தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 2023-24-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.1% சதவீதமாகும்.

2023-ம் ஆண்டு நவம்பரில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 845 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 33 லட்சம் டன், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 2991 மில்லியன் டன், பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன், பாக்சைட் 2174 ஆயிரம் டன், குரோமைட் 135 ஆயிரம் டன், காப்பர் கான்ச் 9 ஆயிரம் டன், தங்கம் 85 கிலோ, இரும்புத் தாது 250 லட்சம் டன், ஈயம் 29 ஆயிரம் டன், மாங்கனீசு 29 ஆயிரம் டன். துத்தநாகம் 136 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 352 லட்சம் டன், பாஸ்போரைட் 101 ஆயிரம் டன், மேக்னசைட் 98 ஆயிரம் டன்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel