தென்னை நார் கொள்கை 2024
COIR POLICY 2024
TAMIL
தென்னை நார் கொள்கை 2024 / COIR POLICY 2024: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.4) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்ந்தும், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும் தயாரிக்கப்பட்டுள்ள "தென்னை நார் கொள்கை 2024"-ஐ வெளியிட்டார்.
தென்னை நார் கொள்கையானது, தென்னை நார் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழிற் நிறுவன சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்குதாரர்களையும் பயன்பெறச் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
இக்கூட்டு அணுகுமுறையானது, இத்தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதன் முன்னேற்ற இலக்கை அடைவதற்கான தீர்வுகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது.
தென்னை நார் தொழில் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்
முன்னிருத்தலை ஊக்குவித்தல்
தென்னை நார் கொள்கை 2024 / COIR POLICY 2024: உலகத் தரத்திலான மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன ஆய்வகம் நிறுவப்படும். தென்னை நார் தொழிலில் நிலையான, சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தென்னை நார் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.
சிறப்பு மையங்கள்
தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகமான சிறப்பு மையங்களை உருவாக்குவது தென்னை நார் கொள்கையின் நோக்கமாகும்.
இம்மையங்கள் புதிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் மண்ணில்லா வளர்ப்பு ஊடக பயன்பாடு, புத்தொழில்கள் மற்றும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடு, தென்னை நார் சார்ந்த தொழில்களின் போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.
சந்தை விரிவாக்கம்
உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகளுக்காக தென்னை நார் சார்ந்த நிறுவனங்கள் வர்த்தக் கண்காட்சிகளில் பங்கு பெறுவதை உறுதி செய்தல், சமச்சீர் தொழில்மயமாக்கல், சமூக சமபங்கு, சுழற் பொருளாதார நடைமுறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏற்றுமதி வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசு திட்டங்களில் புவி விரிப்பு போர்வை (Geo Textiles) போன்ற தென்னை நார் பொருட்களின் பங்களிப்பின் வாயிலாக சந்தை விரிவாக்கத்தை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு
தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கிட கிடங்குகளை நிறுவுதல் மற்றும் குழும மேம்பாடு ஆகியவை தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும்.
போட்டித்தன்மை மற்றும் தரக்கட்டுப்பாடு
தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல், மதிப்புக்கூட்டல் மற்றும் ஏற்றுமதி வணிக மேம்பாட்டிற்கான கருத்துப்பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட போட்டித்தன்மையை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது.
ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய தென்னை நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக மேம்படுத்த இக்கொள்கை வழிவகுக்கும்.
முதலீட்டு ஈர்ப்பு
ஒற்றைச் சாளர முறை மற்றும் தொழில் முதலீட்டாளர்க்கான உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் மூலம் தென்னை நார் சார்ந்த தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்புகளுடன் கூட்டாண்மைக்கான அடித்தளத்தை இந்தக் கொள்கை அமைக்கிறது.
இம்முயற்சிகள் தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு புதிய வழிகளையும், உலகளாவிய அறிதல் ஆகியவற்றை முன்னெடுக்கும்.
தென்னை நார் சார்ந்த தொழில் துறையில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி முன்னேற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தக் கொள்கையானது கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், மகளிர் வேலைவாய்ப்பு, தென்னை விவசாயிகளுக்கான வருமானத்தினை அதிகரித்தல் புதுமை, போட்டித்திறன் மற்றும் பொறுப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி மூலம் புதிய சகாப்தத்தை அடைய வழிகோலுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ENGLISH
COIR POLICY 2024: Tamil Nadu Chief Minister M.K. On Thursday (Jan.4) at the Head Office of Stalin, on behalf of the Department of Micro, Small and Medium Enterprises, the "Coir Policy 2024" has been prepared to realize the challenges and competition faced by coir companies and to ensure the sustainable and inclusive development of coir companies. Published by
Coir policy involves meeting the needs of the coir industries, ensuring their growth and listening to and acting on the views of industry associations to benefit all stakeholders who have invested in the development of the sector. This collaborative approach also ensures that the industry meets its needs and provides solutions to achieve its growth goals.
Key Features of the Coir Industry Policy
Promotion of Innovation
COIR POLICY 2024: To promote the development of world class value added coir products, a state-of-the-art laboratory for coir pellet and coir value added products will be established. The Coir Policy prioritizes the promotion of sustainable, environmentally friendly value-added practices in the coir industry.
Centers of Excellence
COIR POLICY 2024: The coir policy aims to create dedicated centers of excellence for coir pellet and coir based value added products. These centers will promote research for new value-added products, use of soilless culture media in agriculture and horticulture, innovation and use of new value-added products, and competitiveness of coir-based industries.
Market Expansion
COIR POLICY 2024: Strategies for market development both domestically and internationally will be devised. Ensuring participation of coir-based companies in trade fairs for local and international market opportunities, promoting balanced industrialization, social equity, circular economy practices, strengthening eco-friendly export opportunities and contributing to coir products like Geo Textiles in government projects. The policy aims to
Infrastructural Development
COIR POLICY 2024: Establishment of warehouses and cluster development to provide necessary infrastructural facilities will enhance the growth trajectory of coir based industries.
Competitiveness and Quality Control
COIR POLICY 2024: The policy promotes improved competitiveness through various channels including improvement of quality control procedures, workshops and trainings for value addition and export business development.
This policy will lead to rapid development of new coir-based products by working with research institutes.
Investment attraction
COIR POLICY 2024: The policy lays the foundation for partnership with national and international trade bodies with a view to attracting new investments in coir based industry through single window system and favorable environment for industrial investor. These initiatives will lead to new avenues and global awareness for the development of coir based industries.
As the Government of Tamil Nadu is taking steps towards sustainable and inclusive growth in the coir industry sector, this policy will pave the way for a new era of rural economic development, women employment, increased income for coir farmers through innovation, competitiveness and responsible sustainable development, Chief Minister Stalin said.
0 Comments