Recent Post

6/recent/ticker-posts

சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024 / Global Investor Conference 2024 in Chennai

சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு 2024 / Global Investor Conference 2024 in Chennai

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

இதில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும்.

இன்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்ப்பட்டு உள்ளது.

ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளது.

தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு. இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன

அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) செய்ய உள்ளது. சென்னையில் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.

இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.


TNGIM2024 - உலக முதலீட்டாளர்கள் மாநாடு - இரண்டாம் நாள்

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.

பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி மற்றும் மறைமுக வாயிலாக 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய நிறைவு நாள் விழாவில் பேசினார். அதில் இன்று இரண்டாம் நாள் டாப் 10 குழுமம் பற்றிய முக்கிய முதலீட்டு விவரங்களை பார்க்கலாம்.

டாடா (TATA) குழுமம் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் 70,800 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதனால், 3,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதானி குழுமம் சார்பில் பல்வேறு துறைகளில் 24,500 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மத்திய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (CPCL ) சார்பில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகையில் புதிய தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,400 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதானி கனெக்சன் நிறுவனத்தின் சார்பில் 13,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

L&T நிறுவனம், சென்னையில் புதிய ஐடி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க 3,500 கோடி ருபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ராயல் என்பீல்ட் நிறுவனம் சார்பில் 3000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்து காஞ்சிபுரத்தில் புதிய இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னையில் புதிய டேட்டா சேமிப்பு தளத்தை அமைக்க 2,740 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 167 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

ஹிந்துஜா குழுமம் தமிழக்த்தில் 2500 கோடி ரூபாய் அளவில் செங்கல்பட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் ஹைலி க்லோரி ஃபுட்வேர் எனும் நிறுவனம் 2302 கோடி ரூபாய் செலவில் புதிய காலணி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, இன்று அடிக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இதன் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஸ்டெல்லண்டிஸ் குழுமம் திருவள்ளூரில் ஆலை அமைக்க 2000 கோடி ரூபாய்  முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.6,64,180 கோடி என்பதை இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14,54,712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12,35,945 நபர்களுக்கும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள், மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel