Recent Post

6/recent/ticker-posts

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட்டான "ஸுக்யூ-3" வெற்றிகரமாக சோதனை / China's reusable rocket ZHUQUE 3 successfully test-fired

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட்டான "ஸுக்யூ-3" வெற்றிகரமாக சோதனை / China's reusable rocket ZHUQUE 3 successfully test-fired

மீண்டும் பயன் பெறக்கூடிய வகையில் துருப்பிடிக்காத எக்கு திரவ ராக்கெட்டை சீனா வடிவமைத்து அதற்கு “ஸுக்யூ-3” என்று பெயரிட்டிருந்தது. இந்நிலையில் “ஸுக்யூ-3யின் சோதனை வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

செங்குத்தாக ஏவப்பட்ட விண்கலத்தின் அடிப்பாகம் செங்குத்தான நிலையிலேயே வெற்றிகரமாக தரையிறங்கியது. 4.5 மீட்டர் விட்டம் கொண்ட “ஸுக்யூ-3” விண்கலம் திரவ ஆக்சிஜன் மற்றும் மீத்தேனை உந்து சக்தியாக பயன்படுத்துகிறது.

இந்த ராக்கெட் குறைந்தது 20 முறை மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை ஒப்பிடும் போது விண்கலத்திற்கான செலவினம் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை குறையும் என்கிறார்கள் சீன விண்வெளி நிபுணர்கள்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel