பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-26ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.4,797 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக புவி அறிவியல் அமைச்சகத்தின் "பிரித்வி விஞ்ஞான்" என்ற விரிவான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் "வளிமண்டலம் மற்றும் காலநிலை ஆராய்ச்சி கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகளுக்கான முறைகள்", "பெருங்கடல் சேவைகள், மாதிரி செயல்முறை, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்", "துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி", "பூகம்பவியல் மற்றும் புவி அறிவியல்", "ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் மக்கள் தொடர்பு" ஆகிய ஐந்து துணைத் திட்டங்கள் அடங்கும்.
0 Comments