கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய 3 மாநிலங்களில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, பல்வேறு நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சிகளிலும், கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறாா்.
இதையொட்டி, தில்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (பிப்.27) காலை 10 மணியளவில் வந்தடைந்தார்.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்குச் சென்ற பிரதமா் மோடி, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆய்வு செய்தார்.
அங்கு சுமாா் ரூ.1,800 கோடி மதிப்பிலான, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் 'பி.எஸ்.எல்.வி. ஒருங்கிணைப்பு வசதி', மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி', மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'ட்ரைசோனிக் காற்றுச் சுரங்கம்' ஆகிய 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
0 Comments