Recent Post

6/recent/ticker-posts

2024-25 சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves minimum source price to be paid by sugar mills for procurement of cane during 2024-25 sugar season (October-September)

2024-25-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு கொள்முதலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 340 ரூபாயை குறைந்தபட்ச ஆதார விலையாக சர்க்கரை ஆலைகள் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது நடப்பு 2023-24 பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை விட சுமார் 8% அதிகமாகும். இந்தக் குறைந்தபட்ச ஆதார விலை 2024 அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவால், கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5 கோடிக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் (குடும்ப உறுப்பினர்கள் உட்பட) மற்றும் லட்சக்கணக்கான பிற நபர்கள் பயனடைவார்கள். 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான மோடி உத்தரவாதத்தை நிறைவேற்றுவதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel