ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாயாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலான ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாயை விட 10 சதவிகிதம் அதிகமாகும். ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூல் இதுவாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் தான், ஜிஎஸ்டி வசூல் வருவாயில் அதிகபட்ச மாதாந்திர வருவாயாகும். மேலும் இந்த நிதியாண்டில் ரூ. 1.70 லட்சம் கோடி அல்லது அதற்கு மேல் வசூலாவது இது மூன்றாவது முறையாகும்.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில் இருந்து மத்திய அரசுக்கான் ஜிஎஸ்டி ஆக ரூ. 43,552 கோடியும், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி ஆக ரூ. 37,257 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2024 வரையிலான கால கட்டத்திற்கான ஜிஎஸ்டி வர் வருவாயாக, 16 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதை காட்டிலும் 11.6 சதவிகிதம் இதுவாகும்.
முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் (ஏப்ரல் 2022-ஜனவரி 2023) ஜிஎஸ்டி வரியாக மொத்தம் ரூ. 14 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது குறிப்பிடத்தகக்து.
0 Comments