Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக ஜப்பான் வழங்குகிறது / Japan to provide 232.209 billion Japanese Yen as Official Development Assistance Loan for nine projects in various sectors in India

இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக ஜப்பான் வழங்குகிறது / Japan to provide 232.209 billion Japanese Yen as Official Development Assistance Loan for nine projects in various sectors in India

ஜப்பான் அரசு பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் யென் அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவிக் கடனாக வழங்க உறுதியளித்துள்ளது. 

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு விகாஸ் ஷீல் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு. சுசுகி ஹிரோஷி இடையே இன்று இதற்கான முடிவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
  • வடகிழக்கு சாலை வலையமைப்பு இணைப்பு மேம்பாட்டுத் திட்டம் (3-வது கட்டம்) (பகுதி II): துப்ரி-புல்பாரி பாலம் (34.54 பில்லியன் ஜப்பான் யென்)
  • வடகிழக்கு சாலை கட்டமைப்பு இணைப்பு மேம்பாட்டுத் திட்டம் (7-வது கட்டம்: என்எச் 127பி (புல்பாரி-கோராக்ரே பிரிவு) (15.56 பில்லியன் ஜப்பான் யென்)
  • தெலுங்கானாவில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையை ஊக்குவிப்பதற்கான திட்டம் (23.7 பில்லியன் ஜப்பான் யென்)
  • சென்னை சுற்றுவட்டச் சாலை (2-வது கட்டம்) கட்டுமானத்திற்கான திட்டம் (49.85 பில்லியன் ஜப்பான் யென்)
  • ஹரியானாவில் நிலையான தோட்டக்கலையை மேம்படுத்துவதற்கான திட்டம் (16.21 பில்லியன் ஜப்பான் யென்)
  • ராஜஸ்தானில் பருவநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டுக்கான திட்டம் (26.13 பில்லியன் ஜப்பான் யென்)
  • கோஹிமாவில் உள்ள நாகாலாந்து மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நிறுவுவதற்கான திட்டம் (10 பில்லியன் ஜப்பான் யென்)
  • உத்தரகண்டில் நகர்ப்புற நீர் வழங்கல் அமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் (16.21 பில்லியன் ஜப்பான் யென்); மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு ரயில்பாதை திட்டம் (1-வது கட்டம்) (40 பில்லியன் ஜப்பான் யென்)
சாலை கட்டமைப்பு இணைப்பு திட்டங்கள் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

அதே நேரத்தில் சென்னை புற வட்டச் சாலை திட்டம் போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதையும் மாநிலத்தின் தெற்குப் பகுதிக்கான இணைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாகாலாந்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்தி, மூன்றாம் நிலை மருத்துவ சேவை வழங்கலை மேம்படுத்தி, அனைவருக்கும் சுகாதார வசதி அளிக்கும். தெலங்கானாவில் ஒரு தனித்துவமான திட்டம் பெண்கள் மற்றும் கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு தொழில்முனைவோர் திறன்களைக் கண்டறியவும், எம்.எஸ்.எம்.இ.களின் வணிக விரிவாக்கத்தை ஆதரிக்கவும் உதவும்.

ஹரியானாவில், இந்த திட்டம் நிலையான தோட்டக்கலையை ஊக்குவிக்கும் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். ராஜஸ்தானில் வனவியல் திட்டம், காடு வளர்ப்பு, வனம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு மூலம் சுற்றுச்சூழல் சேவைகளை மேம்படுத்தும். 

மலைப்பாங்கான மாநிலமான உத்தராகண்டில், நகர்ப்புற நகரங்களுக்கு நிலையான நீர் விநியோகத்தை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத் திட்டத்தின் ஐந்தாவது தவணை புதிய பிரத்யேக சரக்கு ரயில் அமைப்பை நிர்மாணிக்கவும், அதிகரித்து வரும் சரக்குப் போக்குவரத்தைக் கையாள உதவும் வகையில் போக்குவரத்துக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கவும் உதவும்.

இந்தியாவும், ஜப்பானும் 1958 முதல் இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பில் நீண்ட மற்றும் பயனுள்ள வரலாற்றைக் கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் உறவுகளின் முக்கிய தூணான பொருளாதார கூட்டாண்மை சீராக முன்னேறி வருகிறது. 

இந்த முக்கிய திட்டங்களுக்கான குறிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுவது இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel