‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மானிய விலையில் அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக சில்லறை விற்பனைச் சந்தையில் ‘பாரத் அரிசி’ கிடைக்கும்.
இத்திட்டத்தை தில்லியில் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் நலத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேன்கள் மூலம் விற்பனை செய்யும் வகையில் 100 நடமாடும் விற்பனை நிலையங்களை பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய 2 கூட்டுறவு சங்கங்கள் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்பட உள்ளது. இணைய-வணிக வலைதளங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும்.
0 Comments