Recent Post

6/recent/ticker-posts

உணவுப் பாதுகாப்பு, தர ஒழுங்குமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திருத்தங்களுக்கு உணவு ஆணையத்தின் 43-வது கூட்டத்தில் ஒப்புதல் / 43rd meeting of Food Commission approves amendments to regulate food safety and quality regulations

உணவுப் பாதுகாப்பு, தர ஒழுங்குமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திருத்தங்களுக்கு உணவு ஆணையத்தின் 43-வது கூட்டத்தில் ஒப்புதல் / 43rd meeting of Food Commission approves amendments to regulate food safety and quality regulations

'ஒரே நாடு, ஒரே பொருள், ஒரே ஒழுங்குமுறை' என்ற கருத்தாக்கத்தின் மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதை எளிமையாக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் புதுதில்லியில் மத்திய சுகாதார செயலாளர் திரு அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்ற அதன் 43-வது கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உணவுப் பொருட்களுக்கான இந்திய தர நிர்ணய அமைவனம் அல்லது அக்மார்க் சான்றிதழை ரத்து செய்வதற்கான பல்வேறு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறைகளில் பல்வேறு திருத்தங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

திருத்தங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, உணவு வணிகங்கள் கட்டாய சான்றிதழுக்காக பல்வேறு அதிகாரிகளை அணுக வேண்டியதில்லை. உணவுப் பொருட்களுக்கு சான்றிதழ் மட்டுமே கட்டாயமாக்கப்படும்.

மீட் (ஹனி ஒயின்), ஆல்கஹால் ரெடி-டு-டிரிங்க், பானங்களின் தரநிலைகள், பால் கொழுப்பு பொருட்களின் தரங்களை திருத்துதல், ஹலீம் போன்றவற்றிற்கான தரநிலைகள் ஆகியவை பிற ஒப்புதல்களில் அடங்கும்.

ஒப்புதலை இறுதி செய்வதற்கு முன் பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்க வரைவு அறிவிக்கைக்கான கூட்டத்தில் பல்வேறு உணவு பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறைகளில் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இந்த விதிமுறைகள் பால் கொழுப்பு தயாரிப்புகளின் தரங்களை திருத்துவதை உள்ளடக்கியது. 

உணவு ஆணையம் இறைச்சி பொருட்களுக்கான தரங்களின் ஒரு பகுதியாக 'ஹலீம்' தரங்களை அமைக்கப் போகிறது. ஹலீம் என்பது இறைச்சி, பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் பிற பொருட்களால் தயாரிக்கப்படும் ஒரு உணவாகும், இது தற்போது எந்த தரத்தையும் கொண்டிருக்கவில்லை.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel