கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் படி தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சோந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்தனது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வின் ஃபாஸ்ட் நிறுவனம் அமைக்க உள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது.
இந்த தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவினர் கலந்துகொண்டனர். அவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 Comments