மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாய் செலவில், உலகத் தரத்தில் நினைவிடம், அதன் வளாகத்தில், 15 அடி ஆழத்தில் பூமிக்கடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
அதன் அருகில் இருக்கும் அண்ணாதுரை நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம், நுழைவு வளைவு ஆகியவையும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அழைப்பிதழ் கூட அச்சடிக்காமல், எளிமையான முறையில் இந்நிகழ்ச்சியை, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஏற்பாடு செய்திருந்தார்.
0 Comments