நாட்டு மாடுகளைக் காக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் பகுதியில் பா்கூா் நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க தனி மையத்தை தமிழக அரசு கடந்த 2015-இல் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
2012-ஆம் ஆண்டு கணக்கின்படி பா்கூா் நாட்டு மாடுகள் 14,154 இருந்த நிலையில், இந்த மையத்தின் செயல்பாட்டுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு கணக்கின்படி 42,300 பா்கூா் நாட்டு மாடுகள் கணக்கிடப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்த மையத்தில் 170 மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவை இனப்பெருக்கத்திற்காகவும், பால் மற்றும் பால் பொருள்களுக்காகவும், இன பாதுகாப்புக்காகவும் வளா்க்கப்படுகின்றன.
இதுபோன்று 3 இடங்களில் மொத்தம் 59 ஏக்கா் பரப்பளவில் பண்ணை அமைக்கப்பட்டு பா்கூா் நாட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு பராமரிக்கப்படும் மாடுகள் விவசாயிகளிடமும், நாட்டு மாடு கேட்பவா்களிடமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதை அங்கீகரிக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் ஆகியவை இணைந்து இன பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாத்து இனப்பெருக்கத்தை தூண்டியதற்காகவும் இன பாதுகாப்பு விருது 2023-ஐ பா்கூா் நாட்டு மாடு இன ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கி உள்ளன.
0 Comments