Recent Post

6/recent/ticker-posts

மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் (ஓஎன்டிசி) மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் / Fisheries MoU with Transparent Framework for Digital Trade (ONDC) in presence of Union Minister Mr. Parshottam Rupala

மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் (ஓஎன்டிசி) மீன்வளத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அப்போது மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, உள்நாட்டு மீன்வள இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, ஓஎன்டிசி திரு கோஷி மற்றும் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

"மீன்பிடிப்பது முதல் வர்த்தகம் வரை, டிஜிட்டல் உருமாற்றத்தின் மூலம் சந்தை அணுகலை அதிகரித்தல்" என்ற கையேட்டையும் மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார்.

பாரம்பரிய மீனவர்கள், மீன் பண்ணை உற்பத்தியாளர் அமைப்புகள், மீன்வளத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து பங்கெடுப்பாளர்கள் மின்னணு சந்தை மூலம் தங்கள் தயாரிப்புகளை வாங்கவும், விற்கவும் ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குவதும், மீன்வளத் துறையை ஓஎன்டிசி-யுடன் ஒருங்கிணைப்பதன் நோக்கமாகும்.

மீனவர்கள், மீன் வளர்ப்போர், உழவர் அமைப்பினர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர மீனவர் கூட்டுறவு அமைப்புகளை ஒருங்கிணைத்து மின்னணு சந்தைப்படுத்துதலில் முக்கிய பங்கு வகிக்கும் தனித்துவமான மின்னணு சந்தைப்படுத்துதலை ஓஎன்டிசி மேற்கொள்ளும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel