Recent Post

6/recent/ticker-posts

ஐஎன்எஸ் சந்தாயக் ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு / INS Sandhayak survey vessel attached to Indian Navy

ஐஎன்எஸ் சந்தாயக் ஆய்வுக் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு / INS Sandhayak survey vessel attached to Indian Navy

கொல்கத்தாவில் உள்ள 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜினீயர்ஸ்' நிறுவனம் இந்திய கடற்படைக்காக 4 ஆய்வுக் கப்பல்களை தயாரித்து வருகிறது.

இதில் முதல் கப்பலான 'ஐஎன்எஸ் சந்தாயக்' கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து துறைமுகம் மற்றும் கடலில் விரிவான சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இந்திய கடற்படையில் 'ஐஎன்எஸ் சந்தாயக்' நேற்று (பிப். 03) முறைப்படி இணைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை கடற்படையில் இணைத்து வைத்தார். 

கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel