இலங்கை அதிபர் திரு ரனில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
ஃபின்டெக் கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்துள்ளது. நமது வளர்ச்சி அனுபவங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை, மொரீஷியஸுடன் இந்தியாவின் வலுவான கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பு, விரைவான, தடையற்ற, டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவம் அந்நாட்டு மக்களுக்குக் கிடைக்கும்.
இலங்கை, மொரீஷியஸுக்கு பயணிக்கும் இந்தியக் குடிமக்களுக்கும், இந்தியாவுக்குப் பயணிக்கும் மொரீஷியஸ் நாட்டினருக்கும் யுபிஐ சேவைகள் கிடைக்க இந்தத் தொடக்கம் உதவும்.
மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், மொரீஷியஸில் ரூபே முறையின் அடிப்படையில் மொரீஷியஸ் வங்கிகள் அட்டைகளை வழங்கவும், இந்தியா, மொரீஷியசில் ரூபே அட்டையைப் பயன்படுத்தவும் உதவும்.
0 Comments