Recent Post

6/recent/ticker-posts

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி / Prime Minister Modi laid foundation stone for Kulasekharapatnam Rocket Launch Centre

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி / Prime Minister Modi laid foundation stone for Kulasekharapatnam Rocket Launch Centre

இஸ்ரோவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், ஏற்கனவே ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளத்தோடு சேர்த்து மூன்றாவது ஏவுதளம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 

அதன் படி, அதிகாரிகளின் பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. 

குலசேகரன்பட்டினம் பகுதியில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. 

அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன. 

மேலும், இப்பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார். 

இந்தியாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் அனைத்துமே ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்படுகிறது. காரணம் இந்த இடம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருக்கிறது. 

ஆனால் இதைவிட பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ஒரு இடம் இந்தியாவில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டனம் பகுதிதான். இங்கிருந்து ராக்கெட்களை ஏவும்போது, அது இலக்கை குறைந்த எரிபொருளை கொண்டு அடைந்துவிடும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel