Recent Post

6/recent/ticker-posts

விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves amendment in Foreign Direct Investment Policy in space sector

விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves amendment in Foreign Direct Investment Policy in space sector

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட கொள்கையின் கீழ் தாராளமயமாக்கப்பட்ட நுழைவு வழிகள் விண்வெளியில் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தற்போது, செயற்கைக்கோள் துணைத் துறை மூன்று வெவ்வேறு செயல்பாடுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் அந்நிய முதலீட்டுக்கான வரையறுக்கப்பட்ட வரம்புகளுடன் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023, மேம்பட்ட தனியார் பங்களிப்பின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு விரிவான, கூட்டு கட்டமைப்பாக அறிவிக்கப்பட்டது. 

இந்தக் கொள்கை விண்வெளித் திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விண்வெளியில் ஒரு செழிப்பான வணிக இருப்பை உருவாக்குதல். விண்வெளி சார்ந்த துறைகளில் தொழில்நுட்ப மேம்பாடு, பயன்களுக்கான உந்துசக்தியாக விண்வெளியைப் பயன்படுத்துதல்; 

சர்வதேச உறவுகளை மேம்படுத்தி, அனைத்து தொடர்புடையவர்களிடையேயும் விண்வெளிப் பயன்பாடுகளை திறம்படச் செயல்படுத்துவதற்கான உகந்த சூழல் அமைப்பை உருவாக்குதல்.

தற்போதுள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, செயற்கைக்கோள்களை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் அரசின் அனுமதி பெற்ற வழித்தடத்தில் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. 

இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ன் கீழ் உள்ள உத்திக்கு ஏற்ப, பல்வேறு துணைத் துறைகள்/நடவடிக்கைகளுக்கு தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரம்புகளை பரிந்துரைப்பதன் மூலம் விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மத்திய அமைச்சரவை தளர்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel