பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளில் மீன்வளத் துறையை முறைப்படுத்துவதற்கும், மீன்வளக் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் துணைத் திட்டமான "பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா" திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் துணைத் திட்டம், மத்திய துறை துணைத் திட்டமாக, 6,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதில் 50 சதவீதம், அதாவது 3,000 கோடி ரூபாய் உலக வங்கி மற்றும் ஏ.எஃப்.டி நிதி உட்பட பொது நிதி, மீதமுள்ள 50 சதவீதம், அதாவது 3,000 கோடி ரூபாய் பயனாளிகள் / தனியார் துறையிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முதலீடாக இருக்கும். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை 4 (நான்கு) ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.
0 Comments