Recent Post

6/recent/ticker-posts

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves signing of Bilateral Investment Agreement between India and UAE

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களின், குறிப்பாக பெரிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், இது வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்புதல் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்கும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், இறக்குமதி சார்புநிலையைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் போன்றவற்றின் மூலம் தற்சார்பு இந்தியாவின் இலக்கை அடையவும் இது உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel