பிகாரின் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் மார்ச் 6 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
பிகார் மட்டுமல்லாது அண்டை நாடான நேபாள மக்களும் பயன்பெறும் வகையில், முஸாபர்பூர்-மொய்தாரி இடையே 109 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.
பிரதமர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிகார் ஆளுநர் ராஜேந்திர வி ஆர்லேகர், அம்மாநில துணை முதல்வர்கள் சமத் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
0 Comments