இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு தலைமை நீதிபதி குவாசி ஃபேஸ் இசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், முப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக, மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜா்தாரி சனிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைக்க பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது.
0 Comments